ரோட்டோரம் வாழக்கூடிய முதியோர்கள்,
ஆதரவற்றோர்களுக்கு தீபாவளிக்கான உடைகள்,உணவுகள் வழங்கல்….

மதுரையில் சர்வதேச உதவும் உறவுகள் அமைப்பு மற்றும் யு.என்.பி.எல்.ஹெச்.ஆர்.எப். அமைப்பின் சார்பாக மதுரையில் ரோட்டோரம் வாழக்கூடிய முதியோர்கள்,ஆதரவற்றோர், பார்வையற்றோர்,
பெண்கள்,குழந்தைகளுக்கு தீபாவளிக்கான உடைகள்,உணவுகள் மாட்டுத்தாவணி,காந்திமியூசியம், அரசு மருத்துவமனை,ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு வழங்கப் பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச உதவும் உறவுகள் அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் ஜமாலூதீன் தலைமை வகித்தார். பி.எல்.ஹெச்.ஆர்.எப். சமூக நல பிரிவின் மாநில செயலாளர். மதன்ராஜ் உடைகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார். மற்றும் மாநில நிர்வாகிகள் கதிஜா பீவி, பிரியா ராணி, யுவராஜா, லாவண்யா, அப்துல் ரஹ்மான் கண்ணண்,டேவிட், அன்வர்,ஸ்டீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *