எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே காத்திருப்பு, செம்பதனிருப்பு, ராதாநல்லூர், ஆலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள். விரைந்து அப்புறப்படுத்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு, அல்லிவிளக்கம், செம்பதனிருப்பு,ஆலங்காடு, இராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கருக்கு மேல் பொங்கல் கரும்பு மற்றும் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரும்பு மற்றும் வாழையில் காட்டுப்பன்றிகள் உட்பகுந்து பயிர்களை கடித்து நாசம் செய்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சுற்றியுள்ள காடுகளில் வசிக்கும் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கரும்பு மற்றும் வாழை பயிரிடப்பட்ட. விளைநிலங்களில் புகுந்து அவற்றைக் கடித்து வேரோடு சாய்த்து தின்று வருகின்றது.

இதனால் தங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகை மிகவும் சொற்பமானது எனவும் பயிர்களை நடவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

பயிர்கள் பாதிப்பு குறித்த தகவர் அறிந்த சீர்காழி வனச்சரகர் ஜோசப்டேனியல் தலைமையிலான வனத்துறையினர் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் விரைவில் காட்டு பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பாதிப்புள் குறித்து அரசுக்கு தெரியபடுத்தி உரிய இழப்பீடு வழங்கபடும் எனவும் உறுதியளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *