செய்தியாளர்.ச.முருகவேலு.
நெட்டப்பாக்கம்

புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் ஶ்ரீராமுலு இன்று நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சமீபத்தில் நெட்டப்பாக்கம் கொம்யூன் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாநில துணைச் செயலாளர் கதிர்.பிரபாகரன், கொம்யூன் செயலாளர் மலரவன் தலைமையில் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் அடிப்படையில் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை இயக்குநர் ஶ்ரீராமுலு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பணியில இருந்த மருத்துவர் முகந்திஏழுமலையிடம் மருத்துவமனை குறித்த நிலைமைகளையும், ஏ.என்.எம் செவிலியர்கள் தங்கள் கள பணிகளையும், ஆஷா பணியாளர்கள் தங்கள் வேலைகளை சரிவர செய்கிறார்களா? என கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு தடையின்றி நடக்கவேண்டும், ஓட்டுநர்கள் எப்போதும் பணியில் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நீரழிவு நோய்க்காக அதிகஅளவில் நெட்டப்பாக்கம் மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதில் மிகுந்த சிரமம் இருப்பதால் பண்டசோழநல்லூரில் இயங்கும் துணைசுகாதார நிலையத்தில் அதற்கான செவிலியர்கள் மூலம் சுகர் மாத்திரை வழங்கவேண்டும் , இதனால் பண்டசோழநல்லூர், வடுகுப்பம், கல்மண்டபம் நோயாளிகள் பண்டசோழநல்லூர் துணைமருத்துவ நிலையத்திலே சுகர் மாத்திரைகள் பெற்றுக்கொள்ளலாம், இதனால் நோயாளிகள் சிரமம் அடைவதை தவிர்க்கலாம் என்றார். மேலும் நெட்டப்பாக்கம் சமூக ஆர்வலர் முருகவேலு சில கோரிக்கைகளை இயக்குநரிடம் முன்வைத்தார்.

மடுகரை, சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களை துணை நிலையங்களாகவும் நெட்டப்பாக்கத்தில் கம்யூனிட்டி ஹெல்த் சென்டராக மாற்றி 24 மணிநேரமும் மருத்துவர் பணியில் இருக்கும்படி செய்யவேண்டும் இதனால் நெட்டப்பாக்கத்தைச்சேர்ந்த மடுகரை, சூரமங்கலம், கரியமாணிக்கம், மொளப்பாக்கம், ஏரிப்பாக்கம், நத்தமேடு, கல்மண்டபம், வடுகுப்பம், பண்டசோழநல்லூர், நடுநாயகபுரம் மட்டுமல்லாமல் பனையடிக்குப்பம், கரையாம்புத்தூர், சின்னகரையாம்புத்தூர், மணமேடு உட்பட அனைத்து கிராம மக்களும் 24 மணிநேரமும் அவசரசிகிச்சையும், மருத்துவசேவையும் பெறமுடியும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச்செயலாளர் கதிர்.பிரபாகரன் உடன் இருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *