நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மக்களவை வேட்பாளர்கே.பி.ராமலிங்கம் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் துணைத் தலைவர்.சி.வடிவேல் ஆகியோர் தலைமையில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய பாரதிய ஜனதா வேட்பாளர் ராமலிங்கம் பேசுகையில் இந்த பரமத்தி ஒன்றிய பகுதிகளில் விவசாயத்தை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்களே அதிகம் வசிக்கின்றனர்
முக்கிய தொழில்களான வெற்றிலை, கரும்பு வெல்லம் ஆலைகள் வெல்லம் தயாரிக்கும் பல ஆலைக்கூடங்கள் மற்றும் நாட்டுச் சர்க்கரை மிக முக்கிய தொழில்களாக இங்கு உள்ளன. இதற்கு அதிகப்படியான விலை கிடைப்பதற்கு மையம் ஏற்படுத்தி தரப்படும் . விவசாயிகளுக்கு நேரடியாக விலை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் வேளாண் பொருளாதார மண்டலம் ஏற்படுத்தித் தரப்படும் ஜாத்ரி எக்கனாமிக்ஸ் சோன் பயன்படும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.மேலும் நான் உங்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்து கூறினார். மூன்றாவது முறையாக மோடி அவர்களை பிரதம அமைச்சராக வந்தால் மட்டும் தான் இந்தியா வல்லரசாக மாறும் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்க முடியும் எங்களுக்கு தாமரை சின்னத்தில் அதிகப்படியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் எங்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாமக்கல் மக்களவை வேட்பாளராகிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராமலிங்கமாகிய எனக்கு தாமரை சின்னத்தில் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டு முக்கிய வீதிகள் மற்றும் கிராமங்கள் வழியாக ஓட்டுக்களை சேகரித்து தனது பிரசாரத்தை துவக்கினார்..
நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தலைவர்கள் முன்னணி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு கடைகள் பொதுமக்கள் ஆகியோருக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டுசேகரித்தனர்.