சென்னை மீனம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையின் அடியில் செல்லும் குடிநீர் குழாயில் இருந்து நீர்க்கசிவு ஏற்பட்டு ஜிஎஸ்டி சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்களால் சாலையில் பள்ளம் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து ஜிஎஸ்டி சாலையில் நீர் கசிவு ஏற்படும் இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி தண்ணீர் குழாய் செல்லும் பழுப்பினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஜிஎல்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது..