மூன்றாண்டு காலம் செங்கல் தூக்கியே திரியும் அமைச்சர் உதயநிதி. 38 எம்பிக்களும் அதே செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி இருந்தால் எய்ம்ஸ் வந்திருக்கும் என திருவாரூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..


திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது …
நேற்று ஸ்டாலின் சேலத்தில் பேசினார்.. இன்று அவரது சொந்த ஊரான திருவாரூரில் நான் பேசி வருகிறேன்.
திமுகவின் பொய் மூட்டைகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதிமுக நடப்பு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். நம்முடைய வேட்பாளர் சுர்ஜித் சங்கர் பதவிக்கு வருவதற்கு முன்பே 5000 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளார். அவருக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

இந்த மண் உங்கள் மண்ணாக இருக்கலாம் ஸ்டாலின் அவர்களே.. ஆனால் வெல்லப் போவது அதிமுக. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆடசி பெண்ணான ஆட்சிஇந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் ஆட்சி திமுக ஆட்சி. எத்தனை புயலை பார்த்த ஆட்சி அதிமுக.. ஒரு புயலுக்கே ஸ்டாலின் காணாமல் போய் விட்டார்.

தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளைகளை போல் பார்த்ததால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அதிமுக முடிவு செய்தது.
வேகமாக நிறம் மாறும் கட்சி திமுக.
மதிமுக துரை வைகோ வை கூட்டத்தில் அழ வைத்த கூட்டணி திமுக.. ஆனால் கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி அதிமுக.

10 ஆண்டுகளில் அதிமுக திட்டங்களை நான் பேச தயார்.. 3 ஆண்டுகளில் உங்களுடைய திட்டங்கள் குறித்து மக்கள் முன்னிலையில் பேச தயாரா.

மூன்றாண்டு காலம் செங்கல் தூக்கியே திரியும் அமைச்சர் உதயநிதி. 38 எம்பிக்களும் அதே செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி இருந்தால் எய்ம்ஸ் வந்திருக்கும்.

ஸ்டாலின், உதயநிதி மோடியுடன் பல்லைக் காட்டும் போட்டோக்களை காட்டி யார் பாஜக உடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார்கள் என கேள்வி.

இந்தியாவிலேயே உதவாக்கரை முதலமைச்சர் என்றால் அது ஸ்டாலின் தான்.

எதிர்கட்சியாக இருக்கும் போது கோ பேக் மோடி என்கிறீர்கள் இப்போது சிவப்பு கம்பள வரவேற்பு தருகிறீர்கள்.

23-ஆம் புலிகேசி போல் வெள்ளைக் கொடி ஏந்திய பொம்மை முதல்வர் ஸ்டாலின்.
நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுக.

அதிமுக நிர்வாகிகள் நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்போம்.. ஆனால் திமுக ஊழல் கட்சி.

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் துவங்க கையெழுத்து இட்டது ஸ்டாலின். அதை தடை செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.

விவசாயிகளுக்கு விரோதமான அரசு திமுக.. ஆதரவான அரசு அதிமுக.
சதுரங்க வேட்டை போல மக்களின் ஆசையை தூண்டி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி விட்டது திமுகஅரசு.

பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடுகள் மூலம் அதிமுக சட்டம் இயற்றி மாணவர்களை மருத்துவர்களாக்கியது .

2026 அதிமுக வின் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி.
தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்.. விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் இரா. காமராஜ், ஓ எஸ் மணியன், ஜீவானந்தம், ஜெயபால் கழக அமைப்பு செயலாளர்கள் சிவா ராஜமாணிக்கம், ஆசை மணி துரை செந்தில் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *