செய்யூர் செய்தியாளர்: ரா.கோபாலகண்ணன்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பவுஞ்சூர் பஜார் வீதியில் ஐந்தாவது மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை அதிகப்படுத்தி தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களின் GST வரியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது
செய்யூர் செய்தியாளர்: ரா.கோபாலகண்ணன்