பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தனைாட்சிக் கல்லூரியில் கல்லூரிப்பேரவை நிறைவு விழா நிகழ்ச்சி 05-04-2024 அன்று காலை 9.30 மணியளவில் கலலூரித் திறந்த வெளி கலையரங்கில் நடைபெற்றது. மாணவிகளின் பேரவைத்தலைவர் மற்றும் விலங்கியல்துறை இணைப்பேராசிரியர் C.மிஸ்பாசகாயராணி வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் S.சேசுராணி கல்லூரிச் செயலர் மற்றும் இல்லத்தலைமைச் சகோதரி முனைவர் பி.ஜே. குயின்சிலி ஜெயந்தி தலைமை தாங்கினர்.

மாணவிகளின் பேரவைச் செயலர் செல்வி களந்தா ஜாஸ்மின் மற்றும் துணைப்பேரவைச் செயலர் செல்வி அக்ஷயா பரணி ஓராண்டு கல்லூரிச் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தனர்.

அதனைத் தொடர்ந்து முனைவர் S.அதிசயப் பொன்மணி இணைப்பேராசிரியர் கணிதத்துறை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி என்னும் தலைப்பில் உரையாற்றினார். ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அமைதியான முறையில் மகிழ்ச்சியோடு செயல்பட வேண்டும் மேலும் வெற்றியை இருவகையாகப் பிரித்து உள்ளார்ந்த வெற்றியே வெளிப்புற வெற்றிக்கு அடித்தளமாகக் கொண்டு இறைவனின் அருளோடு வெற்றியை அடையலாம் என்று வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு உயர்ந்த சிந்தனைகளை மாணவிகளுக்கு எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.

அனைத்துத்துறை மாணவச் செயலர்கள், துணைச்செயலர்கள், மேலும் பல்வேறு போட்டிகளில கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர். நிறைவாக மாணவிகளின் பேரவைச் செயலர் செல்வி சுனந்தா ஜாஸ்மின் இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி நன்றியுரை நவில நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *