பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20
பல்லடம் அருகே வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு திருநங்கைகள் உட்பட ஆறு பேர் கைது!!
ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் ஆறு பேரை கைது செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை!!!
திருப்பூர் மாவட்டம்,19-05-2024. பல்லடம்: பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் வசித்து வரும் கார்த்திக் இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பல்லடத்திலிருந்து ஹைடெக் பார்க் சென்றுள்ளார் அப்போது அங்குள்ள பேக்கரியை தாண்டியவுடன் அங்குள்ள காட்டினுள் மறைந்திருந்த மர்மகும்பல் ஒன்று அவ்வலியாக சென்று கார்த்திகை வழிமறித்து கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து இரண்டு பவுன் தங்கச் சங்கிலி நான்கு பவுன் காப்பு மற்றும் ஐம்பதாயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்
இதைத்தொடர்ந்து கார்த்தி ரத்த காயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் இதனை தொடர்ந்து இதுகுறித்து நடப்பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடிய நிலையில் இன்று வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
அப்போது இரண்டு தினங்களுக்கு முன்பு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பல்லடம் ராயர் பாளையத்தை சேர்ந்த திருநங்கை இருவர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இப்ராகிம் கணேசன் சையது ரகுமான் சர்வர் கான் என்றும் தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து இரண்டு பவுன் தங்கச் சங்கிலி ஆறு பவுன் காப்பு மற்றும் 60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்
பல்லடம் அருகே தனியாக சென்ற நபரை கத்தியால் தாக்கி அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழிப்பறி செய்த திருநங்கை உள்பட ஆறு பேர் கைதாகி உள்ள சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது