தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு சேவை பணிகளை செய்து வருகின்ற இந்து சேனா தேசிய பேரியக்கம் புது டெல்லி தலைமையின் ஆலோசனையின் படியும் , மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படியும் பா.ஜ.க.வின் 2024-தமிழக பாராளுமன்ற தேர்தல் மேலாண்மை குழு தலைவர் மற்றும் மாநிலத் துணைத் தலைவருமான உயர்திரு.சக்கரவர்த்தி ஜி அவர்களிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது.

இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநில தலைவர் அருள்வேலன் ஜி பேசிய போது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதே போல் பிரதமர் மோடி ஜி தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

இன்று உலக நாடுகளே போற்றக்கூடிய , பெரிதும் மதிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய தலைவராக இன்று நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் இருக்கிறார்.அனைத்து நாடுகளுக்கும் முன்னோடி நாடாக நமது இந்தியாவை சிறப்பான பல்வேறு திட்டங்களின் மூலம் கொண்டு வந்திருக்கிறார்.

உலக நாடுகளின் அனைத்து துறை வளர்ச்சிகள் உள்ள தரவரிசை பட்டிலில் நமது இந்தியா முதல் இடத்தை அடைவதற்கு மீண்டும் பாரத பிரதமராக மோடி ஜி பொறுப்பேற்க பா.ஜ.க – தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *