வேற்றுமையிலே ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் கலாச்சாரம்.

தமாக தலைவர் ஜி கே வாசன் தஞ்சையில் பேட்டி.

தஞ்சாவூர் பாராளுமன்ற பாஜக கட்சியின் வேட்பாளர் கருப்பு.முருகானந்தம் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த தமாக கட்சி தலைவர் ஜிகே வாசன் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

     பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை  திமுகவின் தவறுகளை புள்ளி விவரங்களோடு தொடர்ந்து வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையிலேயே வாக்காளர்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுகிறது. இதை சகித்துக் கொள்ள ஜீரணிக்க முடியாத திமுக அவர் மீது வழக்கு போடுவதால்  மாறும் என்று நினைக்கிறார்கள். மக்கள் மனதிலே திமுக உடைய  தவறுகள் மிக ஆழமான பதிந்து இருக்கிறது. எதிர்மறை வாக்குகளை எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மீது வழக்கு போடுவதால் அவர்களால் அதை மாற்ற முடியாது. நான் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக இதுவரை 31 பாராளுமன்ற தொகுதிகளுக்கு  வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்துள்ளேன். இன்று  தஞ்சை, பெரம்பலூரில் வாக்கு கேட்க உள்ளேன் இதையும் சேர்ந்து 33 தொகுதிகள் முடிவடையும் . அனைத்து தொகுதிகளிலும் மக்கள் மனநிலையிலே மாற்றம் இருக்கிறது, குறிப்பாக ஒரு வலுவான இந்தியா தேவை. இந்தியாவுடைய பொருளாதாரம் உயர்வதற்கு பாரத பிரதமருடைய மூன்றாம் முறை ஆட்சி தொடர்வது அவசியம், அவசரம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்தியாவின் பாதுகாப்பை ஆளுமை திறன் கொண்ட மோடி அவர்களின் தலைமை தான் உறுதிப்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள் எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு தமிழகத்தில் மிக பிரமாதமாக இருப்பதாகவே என் கருத்து.

       காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற பெயரிலே அணைக்கட்ட நினைக்கும் கர்நாடக அரசுக்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு ஒருபோதும் கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்க கூடிய செயல், தமிழகம் குறிப்பாக டெல்டா மாவட்டம் பாலைவனம் ஆகிவிடும் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். காவிரி பிரச்சனை என்பது நமது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சினை மட்டுமல்ல பயிர் பிரச்சினை, உயிர் பிரச்சினை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அதனுடைய முதல்வரும், துணை முதல்வரும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையிலேயே  தண்ணீர் கொடுக்க மாட்டோம். மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என்று கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.  மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டு அல்ல துரதிஷ்டவசமாக தமிழகத்தின் திமுக ஆட்சியாளர்கள் வாக்கு வந்து அரசியலுக்காக அதனை கண்டிக்காமல் எதிர்த்து அரசு அறிக்கை கொடுக்காமல் வேடிக்கை  பார்ப்பது விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுகிறது, வருத்தத்தை கொடுக்கிறது. காவிரி பிரச்சனையில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக முறையிலே தைரியமாக கர்நாடக அரசிடம் இருந்து  பெற்று தரக்கூடிய உயர்நிலையை ஏற்படுத்த வேண்டும். மாறாக வாக்கு வங்கி கூட்டணி அரசியலிலே திமுக காங்கிரஸ் ஈடுபடுவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். விவசாயிகள் உங்களுடைய தவறான செயல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
   வேற்றுமையிலே ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் கலாச்சாரம் ஒரு மாநிலத்தில் பேரிடர் ஏற்படுகிறது அதிக மழை அதிக வெள்ளம் என்றால் அதற்கு மத்திய அரசு உதவித்தொகை கொடுக்கிறது. பணியாற்றியது என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பங்கும் அதில் பொருந்தும். திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் மத்திய அரசு என்பதை மறந்து ஒன்றிய அரசு கூறுவதை  என்று கூறி பிறகு தவறான கண்ணோட்டத்திலே அவர்கள் இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்திய மக்கள் இவர்களின் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இந்தியா என்றால், இந்தியா அனைவருக்கும் ஒன்று தான் உங்களுடைய பார்வையை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *