ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் புதிய லோகோ அடையாள முத்திரை சின்னம் வெளியீட்டு விழா
அமர் சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 43 வருடங்கள் ஆகிறது. இதன் மூலம் பயனடைந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது.
மாற்றத்திறனாளிகளின் மறுவாழ்வு, கல்வி, தொழிற்திறன், நவீன நுணக்க வழிமுறைகள் போன்ற அனைத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் தொண்டு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது இதர மாநிலங்களிலும் வியாபித்து உள்ளது.
நாடு தழுவிய சிறப்பு நிறுவனமாகத் திகழ வாய்ப்பு பெறும் வகையில் இதன் புதுலோகோ முத்திரை அடையாளம் மாற்றியமைத்து வெளியீடு விழா 13.5.24 அன்று மாலை 5.30 மணியளவில் அமர் சேவா சங்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அமர் சேவா சங்க தலைவர் திரு.S.ராமகிருஷ்ணன், அமர் சேவா சங்க செயலர் திரு.S.சங்கரராமன், செங்கோட்டை தொழில் அதிபர் பிரிமியர் திரு.ராமன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.T.R.வெங்கட்ராமன், டாக்டர்.உதுமான், திருமதி.S.பட்டம்மாள் (கமிட்டிஉறுப்பினர்) குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்கள். அமர் சேவா ஆகியவர்கள் சங்க தலைவர் திரு.S.ராமகிருஷ்ணன் அவர்கள் விழாவை துவக்கி வைத்து வாழ்த்து உரையாற்றினார்கள். அமர் சேவா சங்க செயலர் திரு.சங்கரராமன் அவர்கள் அமர் சேவா சங்க உன்னத சேவையில் செயற்கரிய நல்விளைவுகளையும் அதன் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினையும் எடுத்துரைத்தார்கள்.
விழாவின் தலைமை விருந்தாளி திரு.ஸ்ரீதர் வேம்பு அவர்கள்(Founder CEO, Zoho Corporation) புதிய லோகோ முத்திரையை காணொளி மூலம் வெளியிட்டு பிரகடனப்படுத்தினார்கள். திரு.T.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் (Virtual), திரு.D.R.கார்த்திகேயன் அவர்கள் முன்னாள் மத்திய உளவுத்துறை டைரக்டர் (Virtual) ஆகியவர்கள் வாழ்த்துரை வழங்கி பாராட்டினார்கள். விழாவில்
கலந்து கொண்ட அனைவரையும் திரு.ராஜேஸ்வரன் (தலைமைகணக்காயர்)வரவேற்று தொகுத்து வழங்கினார்கள். அமர் சேவா சங்க குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமர் சேவா சங்க பொருளாளர் திரு.T.V.சுப்பிரமணியன் அவர்கள் நன்றியுரை கூறினார்கள். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.