கோவை டிரினிட்டி பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி பள்ளியில் பயின்ற மாணவர்கள் 100சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
குறிப்பாக 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் டிரினிட்டி பள்ளி மாணவர்கள் 500 க்கு,முகிலேஷ் 494 மதிப்பெண்களும் , விகாஸ் 492 , விக்னேஷ் 483 , நிஷாந்த், 482 மதிப்பெண்களும் பெற்று அசத்தினர். அதே போல் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 600 க்கு ஹர்நிஷ் 589 மதிப்பெண்களும், ருஹான் 587, முஹம்மத் அன்ஃபல் 578, ஆண்டனி செல்வராஜ் 573, ஆதித்யன் 572 மதிப்பெண்களும் பெற்று அசத்தினர்.
இந்நிலையில் டிரினிட்டி பள்ளி சார்பாக தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் ஜோசப் புத்தூர், முதல்வர் தனலட்சுமி,ஆசிரியர்கள் என மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.