சென்னை மறைமலைநகரை சேர்ந்தவர்கள் ஹேமந்த் (வயது 29 ) இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். அவருடைய நண்பர் குகன்ராஜ் (வயது 26) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நண்பர்கள் இந்நிலையில் இன்று அதிகாலை மறைமலைநகரில் இருந்து ஹேமந்தின் இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடியில் உள்ள குகன்ராஜின் உறவினரை சந்திப்பதற்கு தாம்பரம் மதுரவாயல் புழல் பைபாஸ் சாலையில் வழியில் புழல் பைபாஸ் மேம்பாலம் இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலைதடுமாறி பக்கவாட்டு சுவரில் இடித்து மோதி 50 அடி கீழே உள்ள அனுகு சாலையில் இருவரும் பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்தனர் .

கீழே விழுந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்த நிலையில் வலியால் அலறி துடித்தனர். இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் அவர்களை காப்பாற்ற உடனே அவசர ஆம்புலன்ஸிற்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.
அதிலிருந்த செவிலியர்கள் அவர்களை பரிசோதனை செய்தபோது ஹேமந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

படுகாயம் அடைந்த குகன்ராஜை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்களால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய் பிரிவு உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ஹேம்நாதின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் அடிக்கடி இது போன்ற உயிரிழப்பு நிகழ்வுகள் நடப்பதால் காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து நெடுஞ்சாலை துறையினருடன் கலந்து ஆலோசனை செய்து மேலும் விபத்துக்கள் நடக்காத வண்ணம் அந்த இடத்தில் தடுப்பு சுவர்களை உயரமாக அமைத்தும் சாலையில் இரும்பு தடைகளை வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *