புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் வில்லியனூர் தொகுதியின் சார்பாக வில்லியனூர் முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் கூட் .ரோடு அருகில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வெய்யிலின் தாக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கும், வழியில் போவோர் வருவோர் அனைவருக்கும் தண்ணீர் தாகத்தை தீர்கின்ற வகையில் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் மூலம் அனைவருக்கும் மோர் , தர்பூசணி , இளநீர் , நுங்கு ஆகியவை வழங்கப்பட்டது. அதன் மூலம் ஏறாள மான பொதுமக்கள் பயன் பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் மாநில நிர்வாகி .S . மாஸ்கோ தலைமை தாங்கினார்.

RLV பேரவையின் மாநில அமைப்பாளர் சிவகுமாரன் , வில்லியனூர் தொகுதி அமைப்பாளர் அருண், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் R. ரவி வர்மன் முதலியார் பேட்டை தொகுதி அமைப்பாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் R.L. வெங்கட்டராமன் அவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கி, நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் , S.R. சிவகுமார், பேரவையின் அட்மின் கோமதி, வில்லியனூர் மகளிர் அணி தலைவி பரமேஸ்வரி , வில்லியனூர் சுகுணா , முத்துசாமி ,, திருநாவுக்கரசு ,எழிலரசி, சங்கரி , அலமேலு மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *