சோழவந்தான்

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனகை நாராயணப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டுடுத்தி வெண் குதிரையில் இறங்கினார் இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடந்து வருகின்றது.

இதில் முக்கிய நிகழ்வாக சித்திரா பௌர்ணமி அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி முன்னிட்டு நேற்று அதிகாலை 5.20மணிக்கு திருக் கோவிலிருந்து நாராயணப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் புறபட்டு காவல்துறை மண்டகப்படி உள்பட 40க்கும் மேற்பட்ட மண்டபகப்படிகளுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதன்பின் காலை 8.50 மணிக்கு வட்டபிள்ளையார் கோயில் எதிரில் உள்ள படித்துறை வழியாக கள்ளழகர் வெண் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வானவேடிக்கை மேளதாள முழங்க வைகை ஆற்றில் இறங்கி எழந்தருளினார்

அப்போது பக்தர்கள் தண்ணீர் பீச்சியணித்தும் பித்தளை சொம்பில் சர்க்கரை வைத்து சூடம் ஏற்றி கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டனர். குழந்தைகள் கள்ளழகர் மற்றும் மீனாட்சி வேடமனிந்து ஆசி வழங்கினர். இவ்விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுதா, கணக்கர் பூபதி, முரளி மற்றும் பணியாளர்கள் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *