தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் இயங்கி வந்த டி.எம் மாம்பழ மொத்த கடையில் செயற்கையாக ரசாயனம் மருந்து தெளிக்கப்பட்டு மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை விற்பனை விற்பனை செய்யப்டுவாதக தென்காசி உட்கோட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிர மணியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் தென்காசி திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்
சசி தீபா ஆலோசனை பெயரில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட போது செயற்கையாக ரசாயனம் மருந்து தெளிக்கப்பட்டு மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை விற்பனை செய்யப்படுவதை தெரிய வந்தது

உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர்
௹பாய் 45000/- மதிப்புள்ள மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை கையகப்படுத்தி பினாயில் ஊற்றி குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்

இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை களிலும் ரகசிய தகவல் கிடைத்த உடனே மகத்தான பணி செய்யும் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *