வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
நிலக்கோட்டையில் குடிமை பொருள் அங்காடி பொருட்கள் (ரேஷன்) வழங்கும் புதிய மின்னணு சாதன பயிற்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள 107 குடிமை பொருள் அங்காடி பொருட்கள்(ரேஷன்) கடைகளுக்குரிய குடிமை பொருள் வழங்குவதற்கான மின்னணு சாதனம் வழங்கும் விழாவும் மற்றும் அதற்கான பயிற்சியும் நடைபெற்றது.
இந்த பயிற்சியினை சென்னை குடிமைப் பொருள் பொது விநியோக மண்டல மேலாளர் ஷாம் பயிற்சி அளித்தார்.
அப்போது அவர் அளித்த பயிற்சியில் மின்னணு சாதனங்கள் மூலமாக வழங்கப்பட்டதில் ஏராளமான தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தில் நவீன யுக்தியை பயன்படுத்தி இந்த குடிமை பொருள் அங்காடி பொருட்கள் வழங்கும் மின்னணு சாதனத்தில் ஏராளமான பொதுமக்களுக்கு எளிமையான முறையில் விரைவாக பொருட்களை வாங்கி செல்வதற்காக எளிதாக தமிழக அரசு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி, ஆத்தூர் வட்ட வழங்க அலுவலர் பிரவீனா, மற்றும் குடிமை பொருள் அங்காடி கடை ஊழியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்