பெரம்பலூர் மாவட்டம் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.82 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் – பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் ஆறாவது இடம் பிடித்துள்ளது.
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 94.82 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை 3,784 மாணவர்களும், 3,790 மாணவிகளும் என மொத்தம் 7,574 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 3,515 மாணவர்களும், 3,667 மாணவிகளும் என மொத்தம் 7,182 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார், சுயநிதிப்பள்ளிகள், சமூக நலப்பள்ளி என மொத்தம் 79 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில் மொத்தம் 30 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் நத்தக்காடு ஆதி திராவிட நல மேல்நிலைப்பள்ளி, அரசுப் பள்ளிகளான அனுக்கூர், கவுள்பாளையம், சிறுவாச்சூர், ரஞ்சன்குடி, கீழபெரம்பலூர், அரசு மாதிரி பள்ளிகளான பெரம்பலூர், கிழுமத்தூர் ஆகிய 07 அரசுப்பள்ளிலும் பயின்ற மாணவ மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுனர்.
இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளியான எறையூர் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட 14 மெட்ரிக் பள்ளிகளும், 7 சுயநிதி பள்ளிகளும், என மொத்தம் 30 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பதினோராம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுளனர்.