வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1000 அபராதம்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக மதன்குமார்(22) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி, குற்றவாளி மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *