புதுச்சேரி செஞ்சி சாலையில் புனித லூயிஸ் தெ கொன்சாகா பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பணியில் இணைந்து 2025 ஆம் ஆண்டு வரை சற்றேரக்குறைய 37 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து பணி நிறைவுறுகின்ற ஆசிரியை அல்பெர்தா மேரி பணி நிறைவு விழாவில் கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் கலந்து கொண்டு ஆசிரியரை வாழ்த்திப் பாராட்டினார்.
இந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புனித சுதா அம்மையார் தலைமை ஏற்று ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவித்தார் இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜோஸ்பின் டெய்சி ,.ஜாக்குலின், விமலா, ஸ்டெல்லா ராணி , விண்ணரசி, மோட்சராணி அனைவரும் ஒருங்கிணைந்து இசைப் பாடல் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
இப் பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆசிரியரை வாழ்த்திப் பேசினர் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் மயிலம் பொறியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ம. சுபாஷினி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து விழாவின் பல்வேறு கூறுகளைத் தொகுத்து வழங்கினார் செல்வராஜ் அவர்கள் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைந்தார்.
விழாவில் ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் வழக்குரைஞர்கள், பிரெஞ்சு பாடசாலை நிறுவனர் போன்ற இப்பள்ளியின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் பள்ளியின் அலுவக உதவியாளர் பிரபு அவர்கள் நன்றியுரை கூறினார் பள்ளியின் சத்துணவு ஊழியர்கள் சரசு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணி ஓய்வு பெற்ற ஆசிரியரின் கணவர் மகன் – நிஷாந்த் , மகள் – நான்சி, மருமகன் – தாஸ் ஆண்டனி ,பேரக்குழந்தைகள் – நிஷானா உள்ளிட்ட குடும்பத்தார்களும் நண்பர்களும் பெருந்திரலாக கலந்து கொண்டு ஆசிரியரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.