தமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்தல், மற்றும் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்தல் போன்ற காரியங்களை ஆணையத் தலைவர் அருட்தந்தை அருண் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
நிலையில் சென்னை ஐடிசி ஹோட்டலில் எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் சார்பில் நடைபெற்ற பேராயர்கள் மாநாடு மற்றும் தமிழக கிறிஸ்தவர்களின் விழிப்புணர் முகாமில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை ஜோ அருண், மற்றும் துணைத் தலைவர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேருரை ஆற்றினார்கள், அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது அலுவலகத்தில் சந்தித்த, ASMD பேராய நிறுவனரும், பிரதம பேராயருமான டாக்டர் ஜெயசிங் மற்றும் 20 பேராயர்கள் சந்தித்து, தமிழகத்தில் இறைபணி செய்து வரும் அனைத்து போதகர்களுக்கும் தமிழக அரசின் நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர், அதனைப் பெற்றுக் கொண்ட சிறுபான்மை ஆணைய தலைவர் தமிழக முதல்வரிடம் சொல்லி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆவணம் செய்து தருவதாக தெரிவித்தார்.
மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்தவர்களின் பெருவிழாவான கிறிஸ்மஸ் நாளை கொண்டாடும் விதத்தில் தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்தும், அதுபோல சிறுபான்மை ஆணைய தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதம பேராயர் ஜெயசிங் வேண்டுகோள் விடுத்தார். இச்சந்திப்பின்போது தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகளும் முக்கிய அலுவலர்கள் உட்பட பேராயர்களும் உடன் இருந்தனர்.