தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ஜீவா மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

கணிதம் – கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி சங்கமித்ரா 587 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார், அவரைத் தொடர்ந்து கணிதம் – கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி சந்தியா மற்றும் கணக்குப்பதிவியல் – கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு மாணவி ப்ரைசி சொர்ணா ஆகிய இருவரும் 583 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். கணக்குப்பதிவியல் – கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு மாணவி சவேதா 575 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இயற்பியல் பாடத்தில் மாணவி சங்கமித்ரா 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
கணினி அறிவியல் பாடத்தில் மாணவிகள் சங்கமித்ரா, கே சந்தியா, அட்லின் மற்றும் மாணவர்கள் டேனியல் ராஜகுமார், கவிஷ் ராஜா ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வணிகவியல் பாடத்தில் மாணவிகள் ப்ரைசி சொர்ணா, சவேதா மற்றும் மாணவர்கள் சாந்த ராஜா, சுடலை முத்து ஆகியோர் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பொருளியல் பாடத்தில் மாணவிகள் ப்ரைசி சொர்ணா, சவேதாஆகிய இருவரும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணினி பயன்பாடுகள் பாடத்தில் மாணவன் சஞ்சய் கண்ணா 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழ் பாடத்தில் மாணவி அனுசியா
100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.

கணித பாடத்தில் மாணவிகள் சங்கமித்ரா, கே. சந்தியா, விபா மற்றும் மாணவன் ராஜ பரத் ஆகிய நால்வரும் ப 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளார்கள்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 600க்கு 550 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 28 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் இராதா, முதல்வர் ஏஞ்சல் ஜெயா மேரி, துணை முதல்வர் சவிதா ஷெனாய் , உதவி துணை முதல்வர் மயிலம்மாள் மற்றும் அனைத்து பாட ஆசிரியர்களும் பாராட்டினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *