சின்னமனூரில் இயங்கி வரும் வேலு நாச்சியார் சிலம்ப கலை பயிற்சி கூடத்தில் இருந்து ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை…..

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வேலு நாச்சியார் சிலம்ப கலை பயிற்சி கூடம் இயங்கி வருகிறது இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிலம்பம் கற்று வருகின்றனர்

இதில் சிலம்பம் கற்றுக் கொடுப்பதற்கான கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார் ஆசிரியர் பயிற்சி கூடத்தில் சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் சிலம்பம் கற்று வருகின்றனர்.

கடந்த 3 தேதி ஶ்ரீலங்காவில் நடைபெற்ற சிலம்பப் போட்டிக்காக வேலு நாச்சியார் சிலம்ப பயிற்சி கூடத்தில் இருந்து பத்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டிக்கு சென்றனர்

அங்கு ஆறு நாடுகளில் இடையே போட்டி நடைபெற்றது அதில் தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து சென்ற பத்து நபர்களும் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு சாதனை பெற்று தந்தனர்.

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு சிலம்பம் அதில் ஸ்ரீலங்கா சென்று நடைபெற்ற போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரை போட்டியாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவர்கள் சின்னமனூர் வந்ததும் அவர்களுக்கு சிறப்பான மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் மாலை மரியாதையுடனும் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.
சிலம்பம் ஆசிரியர் கூறுகையில் எங்களுக்கு தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகமும் பொருளாதார ரீதியாக உதவி செய்தால் நாங்கள் மென்மேலும் பல சாதனைகளை தமிழகத்திற்கு பெற்றுத் தருவோம் என்று தெரிவிக்கிறார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *