+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.

குளச்சல் நகர குமரி டிரஸ்ட் சார்பாக +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற குமரி டிரஸ்டினுடைய குடும்ப அங்கத்தினரை பாராட்டும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 7 மணியளவில் குளச்சல் நகர குமரி டிரஸ்ட் அலுவலகத்தில் வைத்து தலைவர் அபுதாகிர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
குளச்சல் நகராட்சி மன்ற தலைவர்
தலைவர் அ. நசீர் குமரி டிரஸ்ட் அறங்காவலர் குழு தலைவர் அன்வர் சாதத், பொருளாளர் ஜாகிர் உசேன், குளச்சல் முஸ்லிம் முஹல்ல செயற்குழு உறுப்பினர்கள் சுபஹானி,சாதிக், சாகுல் ஹமீது, சாதிக்,மாஹின் மற்றும் அமீரக குமரி ட்ரஸ்டின் உடைய பொறுப்பாளர் ரசீது ட்ரஸ்டின் செயற்குழு உறுப்பினர் கரீம் ஆகியோர் கலந்து கொண்டு +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இறுதியாக டிரஸ்னுடைய செயலாளர் பாபு உசேன் அவர்கள்
நன்றியுரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *