கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுடன் இணைந்து சம்பளப் பேச்சு வார்த்தையில் கடந்த 01.07.2025 முதல் நாள் ஒன்றுக்கு 475 ரூபாய் ஊதிய உயர்வு பெற்றுத்தந்ததோடு தொழிலாளர்கள் இதுவரை சிலாப் அடிப்படையில் 80 கிலோவாக இருந்த நிலையை மாற்றி 55 கிலோவாக குறைத்து ஒப்பந்தம் செய்ததோடு ஒரு கிலோ ஒன்றுக்கு ரூ.1.50. கூடுதலாக பெற்றுத் தந்துள்ளது இதுவரையிலும் இருந்த பணிச் சுமையை குறைத்து ஊக்கத்தொகையை அதிகப்படுத்தி இதுவரை இல்லாத ஒரு புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிதந்த தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த பாராட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் பாராட்டுக்குரிய தலைவருக்கு சால்வை, கிரீடம் மற்றும் மாலை அணிவித்து ஆரவாரத்தோடு பாராட்டு தெரிவித்தனர் மேலும் தமிழ்நாடு அரசு தேயிலைதோட்டக் கழகத்தில் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 443 ரூபாய் வழங்கி வரும் நிலையில் தனியார் தோட்ட நிறுவனங்களில் 475 ரூபாய் அதிகமாக பெற்றுத்தந்த தலைவரை மனமுவந்து பாராட்டியுள்ளனர்
மேலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு நான்கு மாத அரியர் தொகையை பெற்று தருவதற்கான முயற்சியிலும் தொழிற் சங்கத்தினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ஊதிய உயர்வால் ஒரு மாதத்தில் 26 நாட்கள் பணிபுரியும் கணவன் மனைவிக்கு அரியர்தொகை சுமார் 6 ஆயிரத்து இருநூற்று நாற்பது ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்நிலையில் ஒருசில நிர்வாகத்தினர் இன்னும் ஓரிரு தினங்களில் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்க்கான முயற்ச்சியில் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து அதற்க்கான மேல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்ச்சியின் முன்னதாக வால்பாறை பூமார்க்கெட் பகுதியிலிருந்து மேள வாத்தியம் முழங்க தொழிற்சங்க தலைவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கோவை மாவட்ட அம்மா பேரவை சார்பாக 35 பேர்களுக்கு விலையில்லா கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது
பின்பு மார்க்கெட் பகுதியில் அதிமுக ஆட்சி கால சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் வால்பாறை வீ.அமீது, பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் டி.எல்.சிங்,பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சலாவுதீன் அமீது,பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நரசப்பன், வசந்த், அவைத்தலைவர் சுடர்பாலு, மாணவரணி செயலாளர் லோகேஷ் வரன், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சாய் கிருஷ்ணன், சோலையாறு பெரியசாமி, கலைவாணன், கலையரசன், ஜீவானந்தம்,கமாலுதீன், முத்து முடி பாலன், கருமலை மயில்வாகனம், வில்லோனி முனியாண்டி, ஷேக்கல்முடி அபுபக்கர், மகளிரணி நிர்வாகி கீதா,யூசப்,ஜெகநாதன்,பாபு, மாருச்சாமி, சீனிராஜ், ராமர், வாட்டர் பால்ஸ் சுப்பிரமணியம் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்