கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
சங்க அலுவலகத்தில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக பார் கவுன்சில் உறுப்பினர்கள் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, தாழை முத்தரசு மற்றும் சிவசூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.
தேர்தல் ஆணையர் சிவக்குமார் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில், தலைவராக ஜி.எம்.சங்கர் கணேஷ், செயலாளராக எம்.சங்கர், பொருளாளராக பி.கோபி, துணைத் தலைவராக பி.சிவனுபாண்டி, இணை செயலாளராக எஸ்.சக்திவேல் முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சேர்மத்துரை, கார்த்திக், ராசுக்குட்டி, கருப்பசாமி, கார்த்திக் மாறன் மற்றும் நூலகராக பாலகுருசாமி, துணை நூலகராக அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.