காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கல்லறை திருவிழா முன்னிட்டுசட்டமன்ற உறுப்பினர் நாஜிம் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்…
மேலும் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கிறிஸ்தவ மக்கள் சார்பில் கல்லறை நடைபாதையில் மேற்கூரை இருந்தால் இறை மக்கள் திருப்பணி காண வசதியாக இருக்கும் எனவே மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை அனைவரின் சார்பில் முன் வைத்தார்கள் அதனை ஏற்றுக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் விரைவில் முடித்து தருவதாக உத்தரவாதம் அளித்தார்கள்…
இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ், உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் சத்தியபாலன், அருட்சகோதரிகள் பங்கு பேரவை துணை தலைவர் சோழசிங்கராயர், செயலாளர் E.A. நெல்சன், பொறுப்பாளர்கள் G. அகஸ்டின், P.அமலோர் மற்றும் ஏராளமான கிறித்துவ மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தவர்..!