புதுச்சேரி மாநிலத்தை ஆளும் மக்கள் விரோத என்.ஆர்.காங்கிரஸ் – பாரதிய ஜனதா கூட்டணி அரசு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வஞ்சித்துள்ளதை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை 04.11.2025 செவாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு மிஷன் வீதி புனித ஜென்மராக்கினி தேவாலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் பிரச்சனைக்காக நடைபெறும் இந்த போராட்டத்தில் புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் பங்கேற்று போராட்டம் வெற்றி பெற உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
அன்புடன்,
இரா. சிவா, எம்.எல்.ஏ.,
மாநில கழக அமைப்பாளர்,
புதுச்சேரி மாநில தி.மு.கழகம்.