தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் காப்பீட்டு அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து பதிவு செய்த 750 பொதுமக்களுக்கு, எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வைத்து திட்ட பயனாளர் அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆட்சியில் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும் என்ற அடிப்படை கொள்கை கோட்பாடோடு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறாா்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் திராடவிட மாடல் ஆட்சி சாதனைகளை உன்னிப்பாக கவனத்து வருகின்றனா். ஏழை எளியவா்கள் மருத்துவதுறைகளிலும் தங்களுக்கு எதுவும் தேவையான குறைபாடுகளை தீர்த்து கொள்ள வேண்டும். என்ற தொலை நோக்கு பாா்வையோடு கலைஞர் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தளபதியாா் ஆட்சியிலும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்து புதுப்பிக்காமல் இருந்தால் அவா்களுக்கு புதுப்பித்தலும் புதிதாக விண்ணப்பித்தவா்களுக்கு புதிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு எல்லோரும் திமுக ஆட்சிக்கு துணையாக இருக்கவேண்டும். குறைகளை என்னிடம் சொல்லுங்கள் நிறைவான பணிகளை மற்றவா்களிடம் கூறுங்கள் எந்த உதவி என்றாலும் செய்துகொடுப்பதற்கு வடக்குமாவட்ட திமுக எப்போது தயாராக இருக்கிறது. உங்களுக்கான பணிகளை தொடா்ந்து நாங்கள் செய்வோம். என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலா் உடனிருந்தனா்.