திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து
அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பாஜக சிபிஎம் கடும் வாக்குவாதம் காரசார விவாதம் இந்திய தேர்தல் ஆணையம் நாளை முதல் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ( SIR) செய்யப்பட உள்ளது இதற்காக ஒவ்வொரு இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றனர்.

இதில் திருவொற்றியூர் சென்னை மாநகராட்சி 1 வது மண்டலத்தில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் அதிகாரி மற்றும் துணை தாசில்தார் சோபியா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி உதவி ஆணையர் பத்மநாபன் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கார்த்திக் திமுக சார்பில் மண்டல குழு தலைவர் தி மு தனியரசு பிஜேபி சார்பில் ஜெய்கணேஷ் நாம் தமிழர் கட்சி சார்பில் கோகுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர் எம் எஸ் திரவியம் சிபிஎம் சார்பில் மாமன்ற உறுப்பினர் ஆர் ஜெயராமன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே குப்பன் பேசும்போது கடந்த தேர்தலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் தவறுதலாக பதியப்பட்டிருந்தன அதேபோல் தேர்தல் முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட்டன தேர்தல் அதிகாரிகள் நீங்கள் சரியாக செய்யுங்கள் உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் கட்சியினர் இதை அரசியலுக்காக எதிர்க்க கூடாது இறந்தவர்கள் கண்டிப்பாக சேர்க்கப்பட மாட்டார்கள் வீடு மாறியவர்களுக்கும் விண்ணப்பம் தரப்படாது என அவர்கள் கூறுகிறார்கள்

இதை சரியாக செய்யுங்கள் நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம் என கூறினார் மாமன்ற உறுப்பினர் சிபிஎம் ஆர் ஜெயராமன் பேசும் போது சுருக்க முறை வாக்காளர் பட்டியலுக்கும் சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியலுக்கும் என்ன வித்தியாசம் அதே அதிகாரிகள் தான் இப்போதும் பணிபுரிய போகின்றனர் அனைத்து ஆசிரியர்களும் தேர்தல் பணிக்கு வந்து விட்டால் பள்ளிகள் இயங்குமா? ஒரு மாதத்தில் இந்த பணியை உங்களால் செய்ய முடியுமா இதில் ஏதோ அரசியல் காரணங்கள் இருக்கின்றன இதை நாங்கள் எதிர்க்கிறோம் என கூறி தேர்தல் கமிஷன் குறித்தும் பிஜேபி குறித்தும் பேசினார்

இதை அடுத்து பிஜேபி தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஒரு கட்டத்தில் இரண்டு கட்சி தலைவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது அப்போது மண்டலக்குழு தலைவர் திமுக தனியரசு தலையிட்டு இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தினார்.
அவரவர் கருத்துக்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்திய நிலையில் கூட்டம் பரபரப்பாக முடிந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *