கடந்த மாதம் மூன்று நாட்கள் பெய்த மழையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருந்தது அதனை அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது மாநகரில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்
இதனை அடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் ஆணையர் பிரியங்கா முன்னிலையில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா சுகாதார அலுவலர்கள் ராஜபாண்டி. ராஜசேகர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட சுகாதாரத்துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 57 வார்டுகளில் எந்த பிரச்சினை மழை காலத்தில் இல்லை இரண்டாவது வார்டு 16வது வார்டு 17வது வார்டு ஆகிய பகுதிகளில் மட்டும் தான் பிரச்சனை இருந்தது மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆயில் பால் போடப்பட்டுள்ளது
முதலமைச்சர் எனக்கு வாய்ப்பு வழங்கி 2021. 2022. 2023. 2024 ஆகிய வருடங்களில் என்னென்ன பாதிப்பு என்பதை பார்த்து உள்ளேன் . வருங்காலத்தில் என்ன வசதி செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம் 74 கொசு அடிக்கும் பம்பு உள்ளது பக்கீல் ஓடையில் அடிக்கப்படுகின்ற கொசு மருந்து ஹெவியா அடிக்கப்படுகிறது வரும் காலங்களில் 250 சுகாதார பணியாளர்கள் 60 வார்டுகளுக்கும் சென்று வருகிறார்கள்
பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நாளை முதல் வீடு வீடாக சென்று சோதனை செய்வார்கள் வீட்டில் சிரட்டை .டயர் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கிருக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
பா நகர் பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் குப்பை சேகரித்து வைத்துள்ளனர் அவர்களுடைய வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
அறிவுறுத்தப்பட்டுள்ளோம் திருமண மண்டபங்களில்காலி டம்ளர் தண்ணீர் பாட்டல் போடப்பட்டு வருகிறது மாநகரில் 300 கிலோமீட்டர் கான் சுத்தம் செய்யப்பட்டுள்ளது அதில் வந்து 100 டன் கேரி பை பிளாஸ்டிக் டம்ளர் தான் வந்துள்ளது தண்ணீர் செல்லும் பாதையில் திருமண மண்டபத்தினர் காலி டம்ளர் தண்ணீர் பாட்டிலை போடக்கூடாது பருவ மழை நமக்கு டிசம்பர் வரை உள்ளது கடந்த முறை 250 பேருக்கு தனி நபர் காலி இடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினோம் 147 பேர் அதனை சரி செய்துள்ளனர் நகர் நல அலுவலகம் 14 உள்ளது டெங்கு இதுவரை மாநகர் பகுதியில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை இரவில் தேங்குகின்ற குப்பை சரியாக எடுக்கவில்லை என்ற புகார் வருகிறது அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார்