திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வீனஸ் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜி பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அடிப்படைத் திறனான கூட்டல், கழித்தலில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், திட்ட மேலாளர் க.முருகன், யுரேகா ஆசிரியை சங்கரி, பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.