செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாதவரம் சட்டசபை தொகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா திமுக., சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான வி.மூர்த்தி தலைமையில், புதிதாக பொறுப்பு ஏற்றவர்களுக்கு சால்வை அணிவித்து, அறிமுகம் செய்யும் கூட்டமும், அதனை தொடர்ந்து வரவிருக்கின்ற சட்டசபை தேர்தல் பணிக்கான ஆலோசனை கூட்டமும், மாதவரம் பஜார் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
இந்நிகழ்வில் மாதவரம் தொகுதிக்குட்டபட்ட மாதவரம் மண்டலம், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட ,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா திமுக வின் மாவட்ட அணி, இளைஞர் அணி, மாணவரணி, விவசாய அணி, மகளிரணி, பேரவை உள்ளிட்ட அனைத்து பிரிவிலும், புதிதாக பொறுப்புகள் ஏற்றவர்கள் உட்பட, ஏற்கனவே பொறுப்புகளில் உள்ளவர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மாதவரம் மூர்த்தி
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் மூர்த்தி பேசும் போது, பத்தாண்டாக இந்த தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவரால், மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை ஒட்டுமொத்தமாக மக்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால், 2026 தேர்தலில் அண்ணா திமுகவின் வெற்றியும்,எடப்பாடி மீண்டும் முதல்வராவதும் நிச்சயம் என்றார்.
வரும் தேர்தலில் நிர்வாகிகள், தங்களின் பொறுப்பு மற்றும் அதற்கான கட்சிப்
பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் எனவும் புதியவர்கள் எப்படி செயல்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில், மாதவரம் தொகுதியில் அண்ணா திமுக., வின், வெற்றியை உறுதி செய்யும் வகையில், எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்த, தங்களது அனுபவங்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் வி.மூர்த்தியுடன், துணை செயலாளர்கள் ஜேம்ஸ்விக்னேஸ்வரன்,கே. இந்திரா, மாவட்ட அவைத்தலைவர் திருவொற்றியூர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வெங்கடாஜலபதி, மாதவரம் மேற்கு பகுதி செயலாளர் டி. வேலாயுதம், கிழக்கு பகுதி செயலாளர் எம். கண்ணதாசன்,
அண்ணா திமுக., எம்ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர் புழல் ஜி.கே. இன்பராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாடியநல்லூர் எஸ்.மனோகரன் மு.சுந்தர், அண்ணா திமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்
எம். தமிழரசன், புழல் ஒன்றிய செயலாளர் ஆர். சுப்ரமணி, சோழவரம் ஒன்றிய செயலாளர் பி.கார்மேகம், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ஜி.வி.செந்தில்குமார், செங்குன்றம் நகர செயலாளர் டி.ரமேஷ், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.