அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு கால யாகசாலை ஹோமங்களை தொடர்ந்து யாக சாலையில் இருந்து வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து சுவாமிகள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு விழா கமிட்டியினார் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர்.
இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை குறவன்குளம் ராஜவம்ச சாம்பவர் குல பெருமக்கள் உறவின்முறை சங்கம் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.