கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைமை நிலையச்செயலாளரும் , தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான மா.அதிகமான் முத்துவின் அ.வெங்கடேஷ் -சுவாதி இல்ல திருமண வரவேற்பு விழா கரூர் மாநகரம், தாந்தோன்றிமலை, திருமுருகன் திருமண மகாஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இத்திருமண விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் த.அமிர்தகுமார் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தேவ.முரளி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இவ்விழாவில் ஒன்றியத்தின் மாநில,மாவட்ட,வட்டக்கிளை முன்னாள்,இந்நாள் நிருவாகிகள்,தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர்
சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் சு.பாரதிதாசன் இரா.வெங்கடேச பெருமாள், செந்தில்குமார்,மாநில அமைப்பு செயலாளர் ஆர்.ஆர். முருகன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் இரா.ஜோதி கலைச்செல்வன், பொன்னுசாமி,அர.கோபு,மாநில பிரச்சார செயலாளர் மனோகரன்,மாநில இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாநில தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சினிவாசன், கண்காணிப்பாளர் மோசஸ், முருகானந்தம், ராஜசேகரன், முத்துக்குமார், தமிழக ஆரம்பப்பள்ளிஅரியலூர் ஆசிரியர் கூட்டணி மாநில மதிப்பியல் தலைவர் இளங்கோவன், முன்னாள் மாவட்டத்தலைவர் குமரவேல்,கல்வித்துறை அரியலூர் மாவட்ட நிர்வாகி கண்ணதாசன்,கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், செல்வகுமார், ரமேஷ்,முருகன்,சிவா, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கருணாகரன் மற்றும் மாவட்ட வடக்கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட இணைப்புச்சங்க நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மனமார வாழ்த்தினார்கள்.