சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் ரூபாய் 1. 50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா

சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் மண்டல குழு தலைவர் நந்தகோபால் மாமன்ற உறுப்பினர் கனிமொழி சுரேஷ் முன் நிலையில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு விளையாட்டு திடலை திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுக்கு கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் அதேபோல் சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னை மாதவரம் மண்டலம் 31 வது வார்டு புழல் சைக்கிள் ஷாப் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரட்டை ஏரி பருவமழை காலத்தில் நிரம்பும்போது அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகர மேயர் பிரியா , சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம் எல் ஏ ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து தாழ்வான பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்

அதனைத் தொடர்ந்து வடபெரும்பாக்கத்தில் உள்ள புழல் ஏறி உபரி நீர் கால்வாய் மற்றும் மாதவரம் பால்பண்ணை மணலி ஏரிகளை ஆய்வு மேற்கொண்டு ஏரிகளின் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை குறித்து கேட்டறிந்தார் பின்னர் ஏரிகளின் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து வரும் ஜனவரி மாதம் மாதவரம் பால்பண்ணை ஏரியிலிருந்து பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக படகு சவாரி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்

இதில் உறுப்பினர்கள் சங்கீதா பாபு , சந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நீர்வளத்துறை அதிகாரிகள் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சென்னை மாநகராட்சியில் கூடுதலாக இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளான மாதவரம் மணலி திருவெற்றியூர் சோழிங்கநல்லூர் பெருங்குடி 2011 ஆம் ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகள் எந்த ஒரு வளர்ச்சியும் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் பெறாமல் உள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு வடசென்னை பகுதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக மாதவரம் சட்டமன்ற தொகுதியில் ரூபாய் 1, கோடியே 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டமைக்கப்பட்ட விளையாட்டு திடல் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோன்று நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் மழை பொழியும் என்பதால் இரட்டை ஏறி, புழல் ஏரி ஆகியவற்றிலிருந்து மதகு வழியாக திறக்கப்படும் தண்ணீர் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு மதகு வழியாக சிறிது சிறிதாக உபரி நீர் வெளியேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதோடு, தாழ்வான பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் மாநகர மேயர் பிரியா தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *