மண்ணச்சநல்லூர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த லோகேஷ்பிரசன்னா (29) என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவர், வீரன் மகன் சுந்தர் (21) மற்றும் செந்தில் மகன் வெங்கடேசன் (24) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மண்ணச்சநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் அருகே புதுபாலம் அருகே வந்தபோது, திருச்சியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லோகேஷ்பிரசன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சுந்தர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்ணை
க. மாரிமுத்து.