பெற்றோர் வாங்கிய கடனுக்காக மகனை திட்டிய பைனான்ஸ்காரர் அவமானத்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல்
துறையூர், நவ-05
திருச்சி அருகே காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (58).இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு இரு மகள் ஒரு மகன். மகளுக்கு திருமணமாகி விட்டது. இரு வரும் கோயம்புத்தூரில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகன் சுரேஷ் (27) ஐடிஐ முடித்து விட்டு சொந்த ஊரான காளிப்பட்டியில் இருந்து கொண்டு வெளிநாடு சென்று ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
இவரது பெற்றோர்கள் அம்மாப்பட்டியை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவரிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.பெற்றோர் வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்த முடியாத நிலையில் நேற்று முன்தினம் மற்றவர்கள் முன்பாக சுரேஷிடம் கடன் கொடுத்த முத்துச்செல்வம் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
தந்தை ராஜா நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் சொந்த ஊர் திரும்பியவர், நேற்று காலை டீ குடிக்க கடை வீதிக்கு வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாத கூறப்படுகிறது.சுரேஷின் தந்தை வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்து
அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சுரேசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த துறையூர் போலீசார் சுரேஷின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சுரேஷ் தற் கொலை செய்து கொண்ட தற்கு கடன் கொடுத்த முத் துச்செல்வம் நெருக்கடி தான் காரணம் எனக்கூறி புகார் அளித்தனர்.
முத்து செல்வத்தை கைது செய்யும் வரை சுரேஷின் பிரேதத்தை பரிசோதனை செய்ய விட மாட்டோம் என சுரேஷின் தாய், தந்தை மற் றும் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இறந்து சுரேஷின் தாய் மயக்கம் அடைந்ததார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், துறையூர் தாசில்தார் சிவக்குமார், துறையூர் இன்ஸ்பெக்டர் (பொ)கதிரவன், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி பேச்சு வார்த்தைக்கு பிறகு மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து துறையூர் காவல் நிலையம் மற்றும் துறையூர் அரசு மருத்துவமனை முன்பாக அதி விரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்