மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வரிச்சியூர் அரசு ஆரம்ப பள்ளியில் 77 வது குடியரசு தின விழாசிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கி தேசியகொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் குழந்தை களின் கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டி ஆகியவை நடந்தது.
ஆசிரியர்கள் எமிமாள் ஞானசெல்வி மற்றும் செல்வி ஆசிரியர் எஸ்.எம்.சி உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இறுதியில்குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் வழங்கப்பட்டது….