பொள்ளாச்சி அருகே உள்ளகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனரும்தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி ,முன்னாள் மாணவர் சங்க கல்வெட்டையும் திறந்து வைத்து, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் .

பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில் ககன்யான் திட்டம் குறித்து கூறியதாவது ககன்யான் திட்டம் கொரோனாவிற்கு முன்பு மூன்றடுக்கு திட்டமாக செய்யப்பட்டது .அதன் 3 அடுக்கின் முதல் அடுக்கானது சமீபத்தில் அமெரிக்கா நிலவுக்கு ஆள் இல்லாத கலன் அனுப்புகிறார்கள் .அனுப்பிவிட்டு நாளை மனிதனை அனுப்பினால் மனிதன் உள்ளே இருக்கக்கூடிய உள் கட்டமைப்பு சரியாக இருக்கிறதா என்பதை கண்டறிய அனுப்பியுள்ளார்கள்.

அதே போல் தான் கிட்டத்தட்ட நான் முதலில் சொன்னது .அதனுடைய முதல் கட்டம் .இந்த ஆண்டு நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு சரியாக உள்ளது .அதன் பின் 2கட்டமாக போகும். 3ம் கட்டத்தில் தான் மனிதர்கள் இந்தியாவிலிருந்து, இந்திய மண்ணில் இருந்து மனிதர்கள் போவதற்கான வாய்ப்பு இருக்கும். ஆனால் முதல் கட்டமாக போகும்பொழுது, நாளைக்கு விண்கலத்தில் மனிதர்கள் உட்கார்ந்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும் அந்த சுற்றுப்புற சூழ்நிலைகள் இருக்கும் பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்புகிறோம்.

விண்வெளியுடைய சீதோசன நிலையிலும்இங்கிருந்து ஏவுகணைகள் அனுப்பும் போது இருக்கக்கூடிய அதிர்வலைகள் வெப்ப நிலை இவற்றையெல்லாம் தாங்கக்கூடிய அளவில் உள்ளதா அதற்கான கட்டமைப்புகள் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியிருக்கும் அதே மாதிரி பாதுகாப்பாக இறக்குவது இறக்கிய பின்ன திரும்பவும் ஆராய்ச்சி செய்த பின் செய்ய முடியும் இந்த முதல் கட்ட அமைப்பு இந்த வருடம் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள்
.தலைவர் டாக்டர் முருகேசன் செயலாளர் – ராஜன் தலைமைஆசிரியர் பெருமக்கள்
முன்னாள் பள்ளியில் படித்த 500ககும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் தமிழகத்தில் முன்மாதிரி பள்ளியாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் பள்ளியில் 70ஆண்டு 23ஆயிரம் மேற்பட்ட மாணவி மாணவர்கள்
படித்துள்ளனர் அவர்களை தொடர்பு கொள்ள இது தொடர்பாக
தனி ஆசிரியர்கள் நியமித்துள்ளார் என்று தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *