சிவகங்கையில் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு எழுத்தாளர் ஈஸ்வரன், தான் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார்.

சிவகங்கை தனியார் பள்ளியில், சிவகங்கை தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் ஈஸ்வரன், அறிஞர்களும் மேதைகளும் உருவாக புத்தகம் வாசிப்பதே முக்கிய காரணமாக அமைந்தது என்றவர், மாணவர்கள் இளம் பருவத்திலேயே பாடப் புத்தகங்களுடன், நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும் அன்றாடம் நாளிதழ்களையும் படித்து தங்களது அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் வாக்சிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, உயிர்த்தானம், இளம் இயந்திரங்கள், இலக்குகள் மாறுபடலாம், மாசில்லா உலகம் செய்வோம் ஆகிய தலைப்புகளில் தான் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் நூலகத் தன்னார்வலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *