கோவையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்து ஓடியது.

கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா நடைபெற்றது.பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கலந்து கொண்டார்.

முன்னதாக அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் குஷ்பு பொங்கல் வைத்து வழிபட்டு பொங்கலை பரிமாறிக்கொண்டதுடன், வண்ண உடைகளுடன் வெள்ளிகும்மியாட்டம் ஆடி அசத்தினார்.

இதனை தொடர்ந்து ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. குஷ்பு ரேக்ளா வண்டியின் மீது ஏறி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதனையடுத்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தமிழ்நாடு என்பதை தமிழகம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம் அது தவறில்லை எனவும் எப்படி அழைத்தாலும் இந்தியாவின் அங்கம் தான்.பொங்கல் நம்முடைய பாரம்பரிய பண்டிகை, வீட்டில் சந்தோஷம் கொடுக்கும் பண்டிகை இது.தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்க கேடானது. ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாய் பிச்சை கொடுப்பது போன்று என்றார். தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு இவ்வளவு கேவலாமாக நடந்துக் கொள்ளகூடாது.

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எல்லா பெண்களும் வெளியே போகவில்லை.நானும் கட்சியில் தானே இருக்கிறேன்.திமுகவில் எனக்கு எதிராக தான் நடந்துக் கொண்டனர். ஆனால் அதற்கு பாஜக ஆதரவாக நின்றது. அண்ணாமலை களத்தில் போராடினார்.

கமலஹாசன் அவருடைய கட்சியின் உரிமை காங்கிரஸ் நடைபயணத்தில் பங்குபெற்றது.பொங்கலுக்கு துணிவு, வாரிசு படத்திற்கு போகவில்லை வீட்டில் தான் இருப்பேன்.
அண்ணாமலை துணிச்சலான தலைவர், முந்தய தலைவர்கள் போன்று இல்லை,தமிழகம் , தமிழ்நாடு என்று சொல்வது தவறில்லை. மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி என்றார்.

முன்னதாக ரேக்ளா பந்தயத்தில் முதல் மாடு நிலை தடுமாறி பள்ளத்தில் இறங்கியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *