வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் இசை கலைஞர்களை கௌரவிக்கும் விழா,தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைபெற்றது.

நத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் மாநில பேரவை மற்றும் கலைப்பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தவில், நாதஸ்வரம், புல்லாங்குழல், பறை உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் சிலம்பம், வாழ் வீச்சு, மான் கொம்பு சண்டை, புளியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை அழிவிலிருந்து காத்து வரும் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் மறைந்த கலைமாமணி செல்லமுத்து பிள்ளை மற்றும் அங்கமுத்து பிள்ளை ஆகியோரின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து, இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம், புலியாட்டக் கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூத்த நாடக கலைஞர் கலைமாமணி வரலட்சுமி கலைப் பேரணியை துவக்கி வைத்தார். மாநில அமைப்புக்குழு
சகாய செல்வராஜ் தலைமை தாங்கினார். மண்டல துணை இயக்குனர், உள்ளாட்சி நிதித்துறை தணிக்கை விளக்கு ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜிடிஎன் கல்லூரி தலைவர் ரெத்தினம் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் சிறப்புரையாற்றி, கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் அணிவித்தார். இதில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கிருபாகரன், மாநில அமைப்பாளர் சக்கர சுப்பிராமணியன்,
மாநில நிதிக்காப்பாளர் சுப்பிரமணியன், இசைத்துறை அறிஞர் மம்முது, உலக தமிழராய்ச்சி நிறுவன பன்னீர்செல்வம், திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் உள்ளிட்ட
திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். நிறைவாக வரவேற்புக்குழு செயலாளர் நாகேந்திரன் நன்றி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *