இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா(69) இன்று சற்று முன் திடீரென மரணமடைந்து இருக்கிறார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். உடல்நல குறைவால் மனோபாலா மரணம் அடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மனோபாலா சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் மனோபாலா மரணமடைந்து இருக்கிறார்.

பாரதிராஜாவின் துணை இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்று அதன் பின் 23க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் மனோபாலா. முதன்முதலாக ஆகாயகங்கைபடத்தின் மூலம் இயக்குநா் ஆன அவர் ரஜினியின் ஊர்காவலன் உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கி இருக்கிறார்.

அதன் பின் நடிகராக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என நடிகர் விவேக் உடன் சேர்ந்து நடித்த காமெடி மிகப்பெரிய ஹிட் ஆனது. அதற்கு பிறகு பல படங்களில் அவரது ஒல்லி லுக்கை கலாய்க்கும் விதமாகவே பல்வேறு காமெடிகள் இருக்கும்.
மேலும் தயாரிப்பாளராகவும் களமிறங்கி ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்து இருக்கிறார் மனோபாலா.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *