தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருநெல்வேலி மெயின் சாலையில் பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் அருகில் சங்கரன்கோவில் மகாலட்சுமி தனியார் பள்ளி மெட்ரிக் வேணும் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வந்த டவேரா காரும் நேருக்கு நேர் மோதி காரில் வந்த ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர்பலி பள்ளி வேனில் பயணித்த மாணவர்களில் 5 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர் இதுபோன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட விபத்து குறித்து பனவடலி சத்திரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்

மேற்படி தனியார் பள்ளியின் மாவட்ட கல்வி அதிகாரி திரு ராமசுப்பு அவர்கள் மகாலட்சுமி பள்ளியை ஆய்வு செய்ய வந்தபோது

பள்ளிகள் விடுமுறை காலங்களில் இயங்குவது எப்படி என செய்தியாளர்கள் கேள்விகளுக்கு
முறையான சட்டப்படியான பதிலளிக்கவில்லை

தமிழக பள்ளிகல்வி துறை அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கோடை விடுமுறை அறிவித்துள்ளது தமிழ பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மாவட்ட நிர்வகம் கோடை விடுமுறைகளில் பள்ளிகள் சிறப்பு வகுப்பகள் நடத்த கூடாது என உத்தரவுயிட்டுள்ளதுஇந்த நிலையில் அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட சில தனியார் பள்ளி நிறுவனங்கள் கோடைகால பயிற்சி வகுப்புகளை திட்டமிட்டபடி நடத்தி வருகிறது இதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுவதுயில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க கோடை விடுமுறைகளில் செயல்பட்டுவரும் பள்ளிகள் மீது
மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் அலட்சியமாக செயல்பட்ட கல்வி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்தும் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வகத்தினர் மீதும் வழக்குபதிவு செய்ய வேண்டும் பெற்றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *