பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பெரம்பலூர் துறையூர் ரோட்டில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரி கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி சார் ஆட்சியர் .சு.கோகுல் தலைமையில் இன்று (25.04.2024) நடைபெற்றது.

2023-2024-ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தொழில் வழிகாட்டு ஆலோசனைகள் (Career Guidance) தன்னார்வல இயக்கமான Mass Movement for Transformation (MMT) and NURTURE என்ற இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உத்வேக பேச்சாளர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்றுநர் மூலம் அனைத்து வகையான உயர் கல்வி பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு மாணவ,மாணவியர்களுக்கு தெளிவுரை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை மண்டல உதவி இயக்குநர் சுப்ரமணியன், தாட்கோ மேலாளர் பி.டி.சுந்தரம், ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் வ.அனிதா, மாவட்டக் கல்வி அலுவலர் ஜெகநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் கி.ஜெய்சங்கர் மற்றும் MMT மண்டல ஒருங்கிணைப்பாளர் கதிரவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கண்காணிப்பாளர் அ.ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *