மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல இக்கடிதத்தால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எந்த பலனும் அளிக்காது மாறாக தனியாரை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக இது அமையும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை அனுமதிக்க மாட்டோம் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

இக்கடிதத்தால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எந்த பலனும் அளிக்காது அதன் மாறாக தனியாரை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக இது அமையும் எனவே குஜராத் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அமுல் நிறுவனம் உலகளாவிய அளவில் பால் கொள்முதல் செய்வதால் அதன் மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்றம் செய்து சந்தையில் விற்பனை செய்து லாபம் ஈட்டுகிறது .

எனவே ஒரு லிட்டர் பாலுக்கு ஆவினை விட லிட்டருக்கு பத்து ரூபாய் கூட கொடுத்து கொள்முதல் செய்யக்கூடிய வாய்ப்புவரும் நிலையில் இதனை தட்டிப் பறிக்க நினைப்பது தவறான நடவடிக்கையாகும் .

ஆவின் அழிந்துவிடும் என்கிற பெயரால் விவசாயிகளை அழிக்க துடிப்பது எந்த நியாயம் இருக்கிறது இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் இரட்டை கொள்முதல் நிலை அமுலில் இருக்கிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகமும் அரசு நிர்ணயிக்கும் நிலையில் கொள்முதல் செய்கிறது தனியார் சந்தையில் போட்டிக்கு ஏற்ப விலையை உயர்த்தி கொள்முதல் செய்கிற நிலை இருக்கிற போது ஏன் பாலுக்கு இரட்டை கொள்முதல் அனுமதிக்க மறப்பது ஏன் இதனுடைய கொள்கை திட்டம் என்ன எனவே உடனடியாக இந்த கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதியிருக்கிற முதலமைச்சர் அமுல் நிறுவனத்தை விட ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தவிர ஆவினை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் விவசாயத்தை அழிப்பதற்கு நாங்கள் எந்த நிலையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் .

தமிழ்நாடு முதலமைச்சர் கொள்கை கைவிட வேண்டும் நெல்லுக்கு ஏற்கனவே ரூபாய் 2500 கரும்புக்கு ரூபாய் 4500 வழங்கும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது மூன்றாவது ஆண்டு பருவ கொள்முதல் துவங்க போகிறது .

இதுவரையிலும் வாய் திறக்க மறுக்கிறார் தமிழக முதலமைச்சர் தற்போதைய நிலையில் இடுபொருளின் விலை ஏற்றத்தை கணக்கில் கொண்டு நெல் குவிண்டால் ஒன்று 3000 ரூபாயும் , கரும்பு டன் ஒன்றுக்கு 5000 ரூபாயும் வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *