எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி இரா.கவிதா சங்கர் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் 1).ராசிபுரம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் அபிவிருத்தி திட்டம் 2023 2024 இன் கீழ் சேதமடைந்துள்ள 4240.00 மீட்டர் தார்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகளை புதுப்பிக்க 171.00 லட்சம் மதிப்பீடு 2).ராசிபுரம் நகராட்சி பொது சுகாதாரப் பிரிவில் பராமரிக்கப்படும் உரக்கிடங்கு சந்திரசேகரபுரத்தில் உள்ளது இவ்விடத்தில் கொட்டியுள்ள குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்துவது உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகர்மன்ற தலைவர் அவர்களால் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு கே.ஆர் என்.ராஜேஷ்குமார் எம் பி அவர்களின் பாட்டி திருமதி. பெருமாயி அவர்கள் இயற்கை எய்தியதையொட்டி அன்னாரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நகர்மன்ற கூட்டத்தில் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

இக்கூட்டத்தில் ராசிபுரம் நகர மன்ற துணைத் தலைவர் திருமதி கோமதி ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் ர.அசோக் குமார், உடன் இருந்தனர். மேலும் சுகாதார அலுவலர் மு.செல்வராஜ், நகராட்சி மேலாளர் திருமதி வசந்தா, நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், இளநிலை உதவியாளர் பழனிசாமி,குழாய் பொருத்துனர் மூர்த்தி நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *