பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க. வரதராஜன் கும்பகோணத்தில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…

ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்…

இது தொடர்பாக விளக்கம் கொடுப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அவர் பேசியதாவது……

ராஜஸ்தானில் மோடி பேசியதை மாற்றி சொல்லாத பல விஷயங்களை சொல்லப்பட்டதாக காழ்ப்புணர்ச்சி உருவாக்க வேண்டும் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பேசப்படுகிறது.

ஹிந்தியில் பேசியதால் அது தெளிவாக புரிந்து கொள்ளவில்லை மொழிபெயர்ப்பு என்ற பெயரிலே புதிய புதிய அர்த்தங்கள் கற்பிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கிற வந்தேரிகள் எனக் குறிப்பிட்டுள்ளார் சிறுபான்மையினரை அவர் குறிப்பிடவில்லை. ஊடுருவலாக வந்தவர்களையும்,
வெளியில் இருந்து வந்து, ஆதாரமும் இல்லாமல் தங்கி இருக்கிறவர்களை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இஸ்லாமிய நாடுகளில் கூட அடைக்கலம் கொடுக்காமல் அவர்கள் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்களை குறிப்பிட்டு தான் அவர் சொல்லி இருக்கிறார்.

பிரதமர் தானாக பேசவில்லை முன்னாள் பிரதமர் மன்மோகன் என்ன பேசினார் என்பதன் விளக்கத்தை தான் அவர் பேசியுள்ளார்.

இந்த நாட்டின் சொத்து சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியருக்கு என்று அவர் கூறியுள்ளார்.

அந்தப் பேச்சையும் இன்று நடப்பதையும் ஒன்றாகி இது போன்ற ஆபத்து வருவதற்கு முன்னால் தடுக்கப்பட வேண்டும், சொத்துக்கள் என்று பேசும் போது பெண்களின் தாலியை சேர்த்து அவர் சொல்கிறார்.

ஒரு புரிதலையும், விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும் என்பது பிரதமரின் நோக்கம்.

தமிழகத்தில் மோடி என்ன ஹிந்தியில் சொல்லுகிறார் என்று புரிதல் இல்லை.

எனவே திட்டமிட்டு இந்தியா கூட்டணியினர் விஷம பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மலர்ந்து வருகிறது.

வெற்றிவாகை செடி மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என்றும் அவர் கூறினார்.

மேலும் எங்களது தலைமையில் கூட்டணி அமைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

மேலும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பரப்பும் பொய் பிரச்சாரங்களையும் பரப்புரை கருத்துக்களையும் இந்திய மக்கள் நம்ப கூடாது என அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *